டோனியின் கவனம் முழுவதும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிதான், அதில் நன்றாகச் செயல்பட்டால் 2019 உலகக்கோப்பையில் ஆடுவார் - டோனியின் பயிற்சியாளர் கருத்து

டோனியின் கவனம் முழுவதும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிதான், அதில் நன்றாகச் செயல்பட்டால் 2019 உலகக்கோப்பையில் ஆடுவார் -  டோனியின் பயிற்சியாளர் கருத்து

2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் டோனி எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்தே அவர் 2019 உலகக்கோப்பை வரை நீடிப்பது தீர்மானிக்கப்படும் என்று டோனியின் சிறுபிராய பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

டோனியின் சிறு வயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி  கூறியதாவது:-

“இப்போதைக்கு டோனியின் கவனம் முழுதும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிதான், அதில் அவர் நன்றாகச் செயல்பட்டால் நிச்சயம் 2019 உலகக்கோப்பையில் ஆடுவார் என்று நான் நினைக்கிறேன்.

வயது ஏறிகொண்டிருக்கும் போது அதே ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிப்பது கடினம். ஆனால் அவரது விருப்புறுதியும் ஆட்டத்தை ஆராய்ந்து நோக்கும் தன்மையும் அவரை சிறப்பு வாய்ந்தவராக உருவாக்கியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்காக முழு உடல்தகுதியுடன் அவர் உள்நாட்டு விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் ஆடினார்.

டெஸ்ட் போட்டிகளில் அவர் யாரும் தன்னை நோக்கி விரலை நீட்டும் முன் ஓய்வு அறிவித்தார், டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் விலகும் முடிவு நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கூட தெரியாது, என்றார் கேஷவ் பானர்ஜி.

Related Post

Sports